தமிழகத்தில் இன்று 5697 பேருக்கு கொரோனா உறுதி

சென்னை

ன்று தமிழகத்தில் 5697 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி மொத்த எண்ணிக்கை 5,14,208 ஆகி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இன்னும் குறையாமல் உள்ளது.

இன்று 5697 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மொத்த பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 5,14,208 ஆகி உள்ளது.

இன்று 68 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இதுவரை 8502 பேர் கொரோனாவால் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 5735 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இதுவரை 4,58,900 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 46,806 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் சென்னையில் 999 பேருக்கு இன்று பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 1,50,578 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.