இன்று 5,879 பேர்: தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 2,51,738 ஆக உயர்வு…

சென்னை:

தமிழகத்தில் இன்று புதிதாக மேலும் 5,879 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதனால்  தமிழகத்தில்  கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை  2,51,738 ஆக உயர்ந்துள்ளது.

இன்று ஒரே நாளில் 99 பேர் கொரோனாவால் உயிரிழப்பு. பலி எண்ணிக்கை 2,140 ஆக உயர்ந்துள்ளது.

தற்போதைய நிலையில், 56,738 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 7,010 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தனர். இதுவரை நோய்த்தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 1,90,966 ஆக உயர்ந்துள்ளது. இது  75.86 % ஆக உயர்ந்துள்ளது.

வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த5,512 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .

வெளிநாடுகளில் இருந்து வந்த 821 பேர், உள்நாட்டு விமானங்களில் இருந்து வந்த 603 பேர், ரயில், பேருந்து, சொந்த வாகனங்கள் மூலம் வந்த 4088 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து ரயில், விமானம், பேருந்து மற்றும் இதர வாகனங்களில் தமிழகம் வந்தவர்களின் எண்ணிக்கை 4,74,659 -ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் 58,243பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இதுவரை 26,18,512 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

கார்ட்டூன் கேலரி