சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக மேலும் 5883 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால், கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2,90,907 ஆக உயர்ந்துள்ளது.

இன்று ஒரேநாளில் 5043 பேர் நோய் தொற்றில் இருந்து குணமடைந்து உள்ளனர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 2,32,618 பேர் .

இன்று மட்டும் 118 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

அதிக பட்சமாக சென்னையில் இன்று 986 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.

தமிழகத்தின் மொத்த எண்ணிக்கை 2,90,907-ல் சென்னையில் மட்டும் 1,08,124 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,32,618 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இன்று மட்டும் வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களில் 17 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அரசு அனுமதி அளித்தபின் அண்டை மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து விமானம், ரயில், சாலை மார்க்கமாக வந்தவர்கள் இன்றைய தேதி வரை மொத்த எண்ணிக்கை 5,22,753.

இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 4,897 பேருக்குத் தொற்று உள்ளது. \இதில் சென்னையைத் தவிர வேறு சில மாவட்டங்களிலும் நான்கு இலக்கத்தில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தற்போது 61 அரசு ஆய்வகங்கள், 68 தனியார் ஆய்வகங்கள் என  மொத்த 129 கொரோனா சோதனை  ஆய்வகங்கள் உள்ளன.

தற்போதைய நிலையில், தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 53,481.

மொத்தம் எடுக்கப்பட்ட  சோதனை  மாதிரிகளின் எண்ணிக்கை 31,55,619.

இன்று எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 67,553.

மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 1,75,744 பேர் / பெண்கள் 1,15,136 பேர் / மூன்றாம் பாலினத்தவர் 27 பேர் .

இன்று தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 3,410 பேர். பெண்கள் 2,473 பேர்.

இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.