தமிழகத்தில் இன்று 5890 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

--

சென்னை

ன்று தமிழகத்தில் 5890 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி மொத்தம் 3,43,945 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இன்று ஒரே நாளில் 67,532 பரிசோதனைகள் நடந்துள்ளன.

அதில் 5,890 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.

இதுவரை 37,78,778 பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன.

மொத்தம் 3,43,945 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று 120 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இதுவரை 5,886 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 5,667 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இதுவரை 2,83,937 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

சென்னையில் இன்று 1185 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 117839 ஆக உயர்ந்துள்ளது