இன்று 5,890 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3,26,245 ஆக உயர்வு…

சென்னை:

தமிழகத்தில் இன்று புதிதாக மேலும் 5,890 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதன்ல் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளோர் மொத்த எண்ணிக்கை 3,26,245  ஆக உயர்ந்துள்ளது.

அதிக பட்சமாக இன்று சென்னையில், 1,187 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இன்று மட்டும் 5,556  பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

இன்று ஒரே நாளில் 117 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று ஒரே நாளில் 70,153 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன்மூலம் பரிசோதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 35,69,453 ஆக அதிகரித்துள்ளது.

இன்று பாதிக்கப்பட்டவர்களில் 3,518 பேர் ஆண்கள், 2,372 பேர் பெண்கள்.

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களை 134 கொரோனா பரிசோதனை மையங்கள் தமிழகத்தில் உள்ளன.

இன்று மட்டும் 117 பேர் உயிரிழந்தனர். 34பேர் தனியார் மருத்துவமனையிலும், 83 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,514 ஆக அதிகரித்துள்ளது.

இன்று 5,556 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,67,015ஆக அதிகரித்துள்ளது.

கார்ட்டூன் கேலரி