இன்று 5914 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3,02,815 ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் இன்று 5914 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,02,815  ஆக உயர்ந்துள்ளது.

அதிக பட்சமாக சென்னையில் இன்று 976 பேருக்கு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இன்று மட்டும் 6037 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதனால், பாதிப்பை விட குணமடைந்தோர் எண்ணிக்கை இன்று அதிகரித்துள்ளது.

அதே வேளையில் இன்று 114 கொரோனா நோயாளிகள் சிகிச்சைபலனின்றி  உயிரிழந்துள்ளனர்.

தற்போதைய நிலையில், தமிழகத்தில் கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 53,099 பேர்

இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 5914 பேரில் 5879 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.  மேலும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் 3 பேர் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த 32 பேரும் அடங்குவர்.

தமிழகத்தில் இன்று மட்டும் 67153  பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதுவரை 32,92,958 பேருக்கு சோதனை நடத்தப்பட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி