ஆந்திரப் பிரதேசத்தில் இன்று 6051 பேருக்கு கொரோனா பாதிப்பு

விஜயவாடா

ந்திர பிரதேசத்தில் இன்று 6051 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி மொத்தம் 1,02,349  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இன்று ஒரே நாளில் 6051 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

இதுவரை 1,02,349 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று 49 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

மொத்தம் உயிர் இழந்தோர் எண்ணிக்கை 1090  ஆகி உள்ளது.

இன்று 3257 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இதுவரை 49,568 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்

தற்போது 51,701 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் 1210 பேருக்கும், கர்நூல் மாவட்டத்தில் 664 பேருக்கும், அனந்தப்பூர் மாவட்டத்தில் 524 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.