சென்னை:
மிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று  6,472 பேர் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால்,  தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை  1,92,964 ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில்  1336 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. மற்றவர்கள் மாவட்டங்கள் மற்றும் வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து திரும்பியவர்கள்.
இன்று 5210 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.  இன்று ஒரே நாளில் 88 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று ஒரே நாளில் 62,112 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது இதன்மூலம் பரிசோதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 21,57,869 ஆக அதிகரித்துள்ளது.
இன்று மட்டும் 88பேர் உயிரிழந்தனர். 25 பேர் தனியார் மருத்துவமனையிலும், 63 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,232ஆக அதிகரித்துள்ளது.
இன்று 5,210 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,36,793ஆக அதிகரித்துள்ளது/ இதுவரை 70.89 % பேர் குணமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள மொத்த கோவிட்-19 பரிசோதனை நிலையங்கள் 113 (58 அரசு + 55 தனியார்) உள்ளன/
இன்று மட்டும் 60,375 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பரிசோதனை 20,75,522 ஆக இருக்கின்றது.
இன்று பாதிக்கப்பட்டவர்களில் 3,933பேர் ஆண்கள், 2,539 பேர் பெண்கள். 113
இன்று குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கையை காட்டிலும் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத அளவிற்கு உச்சத்தை தொட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   இன்று அதிக பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதால் பாதிப்பு உயர்ந்துள்ளது
இருப்பினும் 5000த்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்திருப்பது ஆரளவு ஆறுதல் அளிக்கிறது.
தற்போது தமிழகத்தில் 52,939 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.