கொரோனா : இன்று கர்நாடகாவில் 662 பேர், கேரளாவில் 5,887 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி

ன்று கர்நாடகா மாநிலத்தில் 662, கேரளாவில் 5,887 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது.

 

கர்நாடகா மாநிலத்தில் இன்று 662 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.இதுவரை 9,17,571 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 4 பேர் மரணம் அடைந்துள்ளனர்.இதுவரை 12,074 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 1,344 பேர் குணம் அடைந்துள்ளனர்.இதுவரை 8,93,617 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.தற்போது 11,861 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் கர்நாடகா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.

 

கேரளா மாநிலத்தில் இன்று 5,887 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 7,49,451 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.    இன்று 24 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 3,015 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 5,029 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 6,81,397 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 64,860 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் ஐந்தாம் இடத்தில் உள்ளது.