இன்று 6,988 பேர்: கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2லட்சத்தை தாண்டியது…

சென்னை:

மிழகத்தில்  இன்று ஒரே நாளில்  மேலும் 6,988 பேருக்கு தொற்று உறுதியானதால்,  கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2லட்சத்தை தாண்டியுள்ளது. சோதனைகள் அதிகம் மேற்கொள்வதால், பாதிப்பு அதிகமாக தெரிவதாக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  மாநிலம் முழுவதும் கொரோனா பரிசோதனைகளை தமிழகஅரசு முடுக்கி விட்டுள்ளது. இருந்தாலும் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது.

நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலத்தில் 2வது இடத்தில் உள்ள தமிழகம் கொரோனா பரிசோதனையில் முதலிடத்தில் இருக்கிறது.

தமிழகத்தில் இன்று மட்டும் இதுவரை இல்லாத அளவிற்கு 6,988 பேருக்கு தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளதால்  பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,99,749 ல் இருந்து 2,06,737 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரே நாளில் 89 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,409 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை இல்லாத அளவாக இன்று  7,758 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால், கொரோனா வால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,43,297 ல் இருந்து 1,51,055 ஆக அதிகரித்துள்ளது.  இதனால் கொரோனா தொற்று அடைந்தவர்களில் இதுவரை 73.09% பேர் குணமடைந்துள்ளனர்.

இன்று மட்டும் 61,729 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது.

இதுவரை மொத்தம் 22,00,433 பேருக்கு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது 52,273 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.