டில்லி

டில்லியில் இன்று 707 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி மொத்தம் 1,46,134 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டில்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு சிறிது சிறிதாகக் குறைந்து வருகிறது.

 இன்று டில்லியில் 707 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இதுவரை 1,46,134 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று 20 பேர் மரணமடைந்து மொத்தம் 4,131 பேர் கொரோனாவால் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 1,070 பேர் குணமடைந்து இதுவரை 1,31,657 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது 10,346 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் டில்லி ஐந்தாம் இடத்தில் உள்ளது.