கேரளாவில் இன்று வரலாறு காணாத அளவு அதிகமான கொரோனா பாதிப்பு

திருவனந்தபுரம்

ன்று கேரளாவில் வரலாறு காணாத அளவு கொரோனா பாதிப்பு 7445 ஆகி உள்ளது.

இன்று அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பு 60 லட்சத்தை தாண்டி உள்ளது

இந்த வருட தொடக்கத்தில் கேரள மாநிலத்தில் முதல் கொரோனா நோயாளி கண்டறியப்பட்டார்.

அதன் பிறகு கொரோனா பாதிப்பு கேரள மாநிலத்தில் அதிக அளவில் இருந்தது

இதையொட்டி மாநில அரசு பல நடவடிக்கைகள் எடுத்து கொரோனா பாதிப்பு அற்ற மாநிலமாகக் கேரளாவை மாற்றியது.

தற்போது மீண்டும் கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் கேரளாவில் மொத்தம் 7445 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை கேரள வரலாற்றில் காணப்படாத அளவுக்கு இது அதிக எண்ணிக்கை ஆகும்.

கேரள மாநிலத்தில் மொத்தம் 1,74,385 பேர் பாதிக்கபட்டுளனர்.

இன்று 21 பேர் மரணம் அடைந்து இதுவரை 678 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 3,391 பேர் குணம் அடைந்து இதுவரை 1,17,917 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 56,710 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

You may have missed