சென்னையில் இன்று 747 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை

சென்னையில் இன்று 747 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

சென்னையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது.

இன்று தமிழகத்தில் 2708 பேர் பாதிக்கப்பட்டு மொத்தம் 7,11,713 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.

இதில் சென்னையில் மட்டும் 747 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை சென்னையில் 1,96,378 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று 7 பேர் உயிர் இழந்து மொத்தம் 3,599 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இன்று 1482 பேர் குணம் அடைந்து மொத்தம் 1,83,923 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது சென்னையில் 8,856 பேர் சிகிச்சையில் உள்ளனர்.