இன்று 75,500 பேருக்கு சோதனை: கொரோனா பரிசோதனையில் முதலிடத்தில் தொடரும் தமிழகம்!

சென்னை: நாட்டிலேயே கொரோனா பரிசோதனையில், தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. இன்று ஒரே நாளில், தமிழகம் முழுவதும் 75,500 பேருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டு இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 97-ஆயிரத்தை கடந்தது. இன்று ஒரே நாளில் மேலும் 5,958 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட் டுள்ளது.
இந்த நிலையில், இன்று ஒரே நாளில் மட்டும் தமிழகம் முழுவதும் 75,500 பேருக்கு கொரோனா தொற்று சோதனை நடத்தப்பட்டுள்ள நிலையில், இதுவரை 4,42,2361 பேருக்கு சோதனை செய்யப்பட்டு உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்து உள்ளது.

கடந்த ஆகஸ்டு 14ந்தேதி முதல் இன்றுவரை கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ள விவரம்:

ஆகஸ்ட் 26ந்தேதி: 75,500 (சாதனை) பேருக்கு சோதனை நடத்தப்பட்டுள்ளது. இது புதிய சாதனையாக கருதப்படுகிறது.
ஆகஸ்ட் 25ந்தேதி: 70,221 பேருக்கு சோதனை
ஆகஸ்ட் 24ந்தேதி: 70,023 பேருக்கு சோதனை
ஆகஸ்ட் 23ந்தேதி: 70,127 பேருக்கு சோதனை
ஆகஸ்ட் 22ந்தேதி: 73,547 பேருக்கு சோதனை
ஆகஸ்ட் 21ந்தேதி: 74,344 பேருக்கு சோதனை
ஆகஸ்ட் 20ந்தேதி: 75,076 பேருக்கு சோதனை
ஆகஸ்ட் 19ந்தேதி: 67,720 பேருக்கு சோதனை
ஆகஸ்ட் 18ந்தேதி: 67,025 பேருக்கு சோதனை
ஆகஸ்ட் 17ந்தேதி: 67,532 பேருக்கு சோதனை
ஆகஸ்ட் 16ந்தேதி: 70,450 பேருக்கு சோதனை
ஆகஸ்ட் 15ந்தேதி: 70,343 பேருக்கு சோதனை
ஆகஸ்ட் 14ந்தேதி: 70,153 பேருக்கு சோதனை