கொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 7,863, கேரளாவில் 2,938 பேர் பாதிப்பு

மும்பை

ன்று மகாராஷ்டிராவில் 7,863. மற்றும் கேரளா மாநிலத்தில் 2,938 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் இன்று 7,863 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 21,69,330 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 54 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 52,238 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 6,332 பேர் குணம் அடைந்துள்ளனர்.   இதுவரை 20,36,790 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 79,093 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.

 

கேரளா மாநிலத்தில் இன்று 2,938 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 10,64,280 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 16 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 4,227 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 3,512 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 10,12,730 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 47,274 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.