ஆந்திராவில் ஒரே நாளில் 7998 பேருக்கு கொரோனா பாதிப்பு

மராவதி

ந்திர மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 7998 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

தற்போது அகில இந்திய அளவில் ஆந்திரப்பிரதேச மாநிலம் ஆறாம் இடத்தில் உள்ளது.

நேற்று இம்மாநிலத்தில் கொரோனா பாதிப்பு 6045 பேராக இருந்தது.

இன்று 7998 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

ஆந்திராவில் இதுவரை இல்லாத அதிக அளவில் இன்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 72711 ஆக உயர்ந்துள்ளது.

இன்று மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 61 உயர்ந்து மொத்தம் 884 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 5428 பேர் குணமாகி மொத்தம் 37555 பேர் குணம் அடைந்துள்ளனர்.