விஸ்வரூபம்-2′ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்! இன்று இரவு வெளியீடு!

டிகர் கமலின் விஸ்வரூபம் 2 படத்தின் இந்தி பதிப்பில் முதல் போஸ்டர் இன்று மாலை 7 மணிக்கு வெளியிடப்பட இருப்பதாக நடிகர் கமலஹாசன் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிசந்திரனுக்கும் இடையில், உரிமை தொடர்பாக சில பிரச்னைகள் இருந்ததால், வெளியீடு தள்ளிப்போனது.

அதனால், ‘விஸ்வரூபம்-2’ படத்தை கமலே வெளியிட முயற்சி மேற்கொண்டு வருகிறார். படத்துக்கான இசைக்கோர்ப்பு வேலைகள் தற்போது நடந்துவருகின்றன.

இந்த நிலையில், கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் ‘விஸ்வரூபம்-2′ படத்துக்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர், இன்று இரவு 7 மணிக்கு வெளியாகும்’ என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கமல் நடித்த மூன்று படங்கள் வெளியாகி, நான்காவது படமான சபாஷ் நாயுடு தொடங்கப்பட்டு, கமல் விபத்தில் சிக்கியதால் பாதியில் நிற்கிறது. சபாஷ் நாயுடு படப்பிடிப்பை மீண்டும் ஆரம்பிக்க முடியாத சூழ்நிலை உள்ளதால்,

இப்போது விஸ்வரூபம்-2 படத்தை தாமே வெளியிட கமல் முயற்சி மேற்கொண்டுள்ளார்.