மக்களவையில் ஒரு மணி நேரத்தில் 8 மசோதாக்கள் தாக்கல்

டில்லி

இன்று அரசு சார்பில் மக்களவையில் ஒரு மணி நேரத்தில் 8 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன

மக்களவை தேர்தல் முடிந்து பாஜக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. தற்போது மக்களவையின் முதல் கூட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த 5 ஆம் தேதி அன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தார்.

இன்றைய கேள்வி நேரம் முடிந்ததும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா புதிய மசோதாக்களை தாக்கல் செய்ய அரசுக்கு அனுமதி அளித்தார். அதையொட்டி அரசு சார்பில் 8 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டது.  இந்த எட்டு மசோதாக்களும் ஒரு மணி நேரத்துக்குள் தாக்கல் செப்பட்டுள்ளன.

அவை

1.டிஎன் ஏ தொழில்நுட்பம் பயன்பாடு மற்றும் உபயோகம் குறித்த சட்டம்,
2.சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச் சட்ட திருத்த மசோதா,
3.தேசிய புலனாய்வுத் துறை சட்ட திருத்த மசோதா
4.மனித உரிமை பாதுகாப்பு சட்ட திருத்த மசோதா,
5.நுகர்வோர் பாதுகாப்பு சட்ட மசோதா
6.அரசு இட ஆக்கிரமிபு தடை அகற்றல் சட்ட திருத்த மசோதா
7.ஜாலியன் வாலா பாக் தேசிய சின்ன சட்ட திருத்த மசோதா
8.மத்திய பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா

ஆகியவை ஆகும்.

கார்ட்டூன் கேலரி