சென்னை

ன்று சென்னையில் 801 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு மொத்த எண்ணிக்கை 1746 ஆகி உள்ளது.

நாடெங்கும் கடந்த 16 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி உள்ளது. தமிழகத்தில் இதை 16 ஆம் தேதி அன்று காலை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடக்கி வைத்தார்.  சென்னையில் 12 இடங்களில் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.

சென்னையில் இதுவரை 1746 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இதில் இன்று ஒரே நாளில் 801 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.,  16 ஆம் தேதி 508 பேருக்கும் 17 ஆம் தேதி  அன்று 437 பேருக்கும் இன்று அதாவது 18 ஆம் தேதி அன்று 801 பேருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இதில் ராஜிவ் காந்தி பொது மருத்துவமனையில் அதிக பட்சமாக 56 பேருக்கு கோவாக்சின் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.  மீதமுள்ள 745 பேருக்கு கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.  இதில் அதிகபட்சமாக ஸ்டான்லி மருத்துவமனையில் 119 பேருக்குப் போடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 10,256 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.  இதில் 10,051 பேருக்கு கோவிஷீல்ட் மற்றும் 205 பேருக்கு கோவாக்சின் தடுப்பு மருந்து போடப்பட்டுள்ளது.  இந்த மூன்று தினங்களில் மொத்தம் 16,462 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.