கொரோனா : இன்று கர்நாடகாவில் 810 பேர், கேரளாவில் 4,600 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி

ன்று கர்நாடகா மாநிலத்தில் 662, கேரளாவில் 4,600 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது.

 

கர்நாடகா மாநிலத்தில் இன்று 810 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.இதுவரை 9,21,938 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 8 பேர் மரணம் அடைந்துள்ளனர்.இதுவரை 12,107 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 743 பேர் குணம் அடைந்துள்ளனர்.இதுவரை 8,98,919 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.தற்போது 10,893 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் கர்நாடகா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.

 

கேரளா மாநிலத்தில் இன்று 4,600 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 7,75,853 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.    இன்று 25 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 3,142 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 4,668 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 7,07,397 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 65,277 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் ஐந்தாம் இடத்தில் உள்ளது.