இன்று ஆந்திராவில் 82 பேர், டில்லியில் 220 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி

ன்று ஆந்திரா மாநிலத்தில் 82 பேர், மற்றும் டில்லியில் 220 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது.

ஆந்திரா மாநிலத்தில் இன்று 82 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 8,89,585 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   

இதுவரை 7,168 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இன்று 74 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 8,81,806 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். 

தற்போது 611 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் ஆந்திரா மாநிலம் நான்காம் இடத்தில் உள்ளது.

 

டில்லியில் இன்று 220 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 6,38,693 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இதுவரை 10,905 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இன்று 188 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 6,26,519 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.   தற்போது 1,169 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் டில்லி ஆறாம் இடத்தில் உள்ளது.