சென்னையில் இன்று 833 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை

சென்னையில் இன்று 833 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ் வந்துள்ளது.

இன்று தமிழகத்தில் 3077 பேர் பாதிக்கப்பட்டு மொத்தம் 7,00,193 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.

இதில் சென்னையில் மட்டும் 833 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை சென்னையில் 1,93,299 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று 13 பேர் உயிர் இழந்து மொத்தம் 3,569 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இன்று 1077 பேர் குணம் அடைந்து மொத்தம் 1,78,623 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது சென்னையில் 11,107 பேர் சிகிச்சையில் உள்ளனர்.