கொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 8,998, கேரளாவில் 2,616 பேர் பாதிப்பு

மும்பை

ன்று மகாராஷ்டிராவில் 8,998. மற்றும் கேரளா மாநிலத்தில் 2,616 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் இன்று 8,998 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 21,88,183 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 60 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 52,340 பேர் உயிர் இழந்துள்ளனர். 

இன்று 6,135 பேர் குணம் அடைந்துள்ளனர்.   இதுவரை 20,49,484 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 85,144 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.

 

கேரளா மாநிலத்தில் இன்று 2,616 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 10,69,661 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 14 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 4,256 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 4,156 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 10,20,671 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 44,438 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.