இன்று 905 பேர்: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 9352 ஆக உயர்வு

டெல்லி:

ந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 905 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 9ஆயிரத்து 352 ஆக உயர்ந்து உள்ளது.  கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 51 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை  324 ஆக அதிகரித்து உள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  ”இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 905 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் நாடுமுழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9352 ஆக உயர்ந்துள்ளது.

இந்த 9352 பேரில், 8048 பேருக்கு கொரோனா பாதிப்பு தீவிரமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை  980 பேர் குணமடைந்துள்ளனர்.
கடந்த 24 மணிநேரத்தில் 51 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தோர் எண்ணக்கை 324 ஆக உயர்ந்துள்ளது.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.