விஜயவாடா

ன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 9,716 கர்நாடகாவில் 23,558 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

கர்நாடகாவில் இன்று 23,558 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 12,22,202 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 116 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 13,762 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 8,155 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 9,96,367 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,76,188 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கர்நாடகா மூன்றாம், இடத்தில் உள்ளது.

 

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 9,716 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 9,86,703 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 38 பேர் உயிர் இழந்து இதுவரை 7,510 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இன்று 3,359 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 9,18,985 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 60,208 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் ஆந்திர மாநிலம் ஐந்தாம் இடத்தில் உள்ளது.