சென்னையில் இன்று 986 பேர், மொத்த கொரோனா பாதிப்பு 1,08,124ஆக அதிகரிப்பு

சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக மேலும் 5883 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதிகபட்சமாக சென்னையில் இன்று 986 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் சென்னையில் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை  1,08,124 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று மட்டுமே  869 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை 94,100 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.

தற்போதைய நிலையில்,  11,734 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் இன்று ஒரேநாளில்  20 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதன் காரணமாக சென்னையில் மட்டும் கொரோனா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,290  ஆக அதிகரித்துள்ளது.

கார்ட்டூன் கேலரி