சபரிமலை விவகாரம்: இன்று மீண்டும் கூடுகிறது தேவசம் போர்டு!

திருவனந்தபுரம்:

பரிமலை பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து வன்முறை களமாக மாறி வரும் நிலையில், சமூக நிலை ஏற்படுத்து வது குறித்து இன்று கேரள தலைநகர்  திருவனந்தபுரத்தில் தேவசம் போர்டு கூடி ஆலோசனை நடத்த உள்ளது.

சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு மாநிலம் முழுவதும் கடுமையான எதிர்ப்புகள் கிளப்பி உள்ள நிலையில், தற்போது ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சில பெண்கள் கோவிலுக்கு செல்ல முயன்றதால் அவர்கள், பக்தர்களால் தடுத்து நிறுத்தப்பட்ட னர். இதன் காரணமாக பல இடங்களில் மோதல், தடியடி ஏற்பட்டு கலவரம் ஏற்பட்டது. ஏராளமான அரசு பஸ்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

மேலும், சபரிமலைக்கு பெண்களை அனுமதிக்க கூடாது என கேரளா முழுவதும் சபரிமலை பாதுகாப்பு இயக்கம், பா.ஜ.க., உட்பட பல்வேறு இந்து அமைப்புகள் மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த பரபரப்பான சூழ்நிலையில்,  பிரச்சினைக்கு சுமூகமான தீர்வு காண்பதற்காக இன்று தேவசம் போர்டு கூடுகிறது.

‘சபரிமலை பிரச்சனையை தீர்ப்பதற்கும், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரவும்,  எந்த விதமான சமரசத்திற்கும் தேவசம் போர்டுதயாராக உள்ளது. இதனை வைத்து அரசியல் செய்வது எங்களது நோக்கமல்ல’ . இந்த பிரச்சனையை தீர்த்து வைக்க போர்டு முடிந்தவரையில் முயற்சிக்கிறது என்றும்,  சபரி மலை தீர்ப்பை மறுபரிசீலனை செய்யுமாறு உச்ச நீதிமன்றத்திடம்  நாங்கள் கோரிக்கை வைத்தால், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பக்தர்கள் அதனை கைவிடுவார்களா? என்று போர்டின் தலைவர் அ. பழனிசாமி  அவர் கேள்வி எழுப்பினார்.

இந்த கூட்டத்தில் போராட்டத் தரப்பினர்,. பந்தளம் அரச குடும்பத்தினர், தந்திரிகள் பங்கேற்பார்களா  என்பது குறித்து உறுதியான தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

ஏற்கனவே கடந்த வாரம் நடைபெற்ற கூட்டம் தோல்வியில் முடிந்த நிலையில் இன்று மீண்டும் கூடுகிறது.