ன்று அட்சய திருதியை… இன்றைய நாளில் தங்கம் மட்டுமே சேமிக்க வேண்டும் என்ற எண்ணத்தை தவிர்த்து, ஏழைகளுக்கு அன்னதானம்  செய்யுங்கள்….  தானத்தில் சிறந்தது அன்னதானம்… உணவளிப்பதன் மூலம் மற்றவர்களுக்கு ஒரு தாயாகவே மாற இது ஒரு அரிய வாய்ப்பு.

சித்திரை மாதம் அமாவாசை அடுத்து வரும். மூன்றாம் பிறை நாளான திருதியை தினத்தை தான் ‘‘அட்சய திருதியை’’ என்று அழைக்கப்படுகிறது.

அட்சய திருதியை அன்று நாம் செய்கின்ற எந்தவொரு நற்காரியமும், செயலும் பன்மடங்கு பெருகி நம் வாழ்வில் வளம் சேர்க்கும் என்பதே உண்மை.  ‘‘அட்சயம்’’ என்றால் என்றென்றும் வளர்வது, பூரணமானது குறையாதது, அழியா பலன் தருவது என்று பொருள். அட்சய திருதியை என்றாலே அள்ளக்அள்ளக் குறையாத  அட்சய பாத்திரத்தையே நினைவுபடுத்துவதாகும்.

இந்த அட்சயப்பாத்திரத்தின்மூலம்தான் மணிமேகலை ஏராளமானோருக்கு உணவளித்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன.

இன்றைய தினம், காலைக்கடன்களை முடித்துவிட்டு, அருகில் உள்ள  கடைக்கு சென்று கல் உப்பு வாங்கி உங்கள் சமையல் அறையும் வையுங்கள்… இது உங்கள் குடும்பத்தினரின் உணவு பற்றாக்குறையை போக்கும்…..  பின்னர் முன்னோர்களை வணங்கி,  வீட்டில் தயிர் சாதம் செய்து அதனுடன் நெல்லிக்காயை  சேர்த்து அன்னதானம் செய்யலாம்…  குருமிளகு நிறைய கலந்த உளுந்து வடை தயார் செய்தும் ஏழைகளுக்கு வழங்கலாம்… இவ்வாறு அன்னதானம்  செய்வதால் அவர்களின் குடும்பம் தழைத்தோங்கும் என்பது நம்பிக்கை.

ஆனால், இன்றைய காலங்களில் வணிகர்கள் தங்கள் வியாபாரத்தை பெருக்கும் நோக்கில், இன்றைய நாளில்  தங்கம் வாங்கினால் வீடுகளில் அட்சய பாத்திரம் போல தங்கம் அள்ள அள்ளக்குறையாத அளவில்  பெருகும் என்று மக்களை ஏமாற்றி சம்பாதித்து வருகிறார்கள்…

இன்று ஒரு நல்லநாள் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் கிடையாது. இன்றைய நாளில் பொருட்கள் வாங்கினால்  வீட்டில் செல்வ வளம் பெருகும் என்பது ஐதிகம்…  இதற்காக நாம் தங்கம்தான் வாங்க வேண்டும் என்று இல்லை… ஏதாவது நமக்கு தேவையான ஒரு பொருளை வாங்கினாலும் அது நன்மையே பயக்கும்…  சாதாரண உப்பு வாங்கினால்கூட போதுமானது.

இன்றைய தினம் நமது வீடுகளில் நமது முன்னோர்களை நினைத்து வணங்கி சில ஏழைகளுக்கு உணவளித்தலே நலம்.. முன்னோர்களின் ஆசியும் கிட்டும், என்றும், குடும்பத்தில் ஆரோக்கியம், ஐஸ்வரியம் கிடைக்கும் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன.

அட்சய திருதியை அன்று நகை வாங்க வேண்டும் என்று எந்த ஏடுகளிலோ, புராணக்கதைகளிளோ, சித்தர்கள் அல்லது வேறு புத்தகங்களிளோ எதிலும் குறிப்பிட படவில்லை என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்…