சென்னை : பெட்ரோல் டீசல் விலை இன்றும் அதிகரிப்பு

சென்னை

பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்றும் அதிகரித்துள்ளது.


எண்ணெய் நிறுவனங்கள் கச்சா எண்ணெயின் விலை மாறுதலுக்கேற்ப தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை மாற்றிக் கொள்ளலாம் என மத்திய அரசின் அறிவிப்பை தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளில் தினமும் மாற்றம் ஏற்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்களாக தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்து புதிய உச்சங்களை தொட்டு வருகிறது. அவ்வாறு இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்துள்ளது.

சென்னையில் நேற்றைய பெட்ரோல் விலையை விட இன்று லிட்டருக்கு 19 காசுகள் அதிகரித்துள்ளது. இன்று பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 85.92 ஆக விற்கப்படுகிறது. அதே போல் டீசல் விலை லிட்டருக்கு 31 காசுகள் உயர்ந்து ரூ.79.51 க்கு விற்கப்படுகிறது.