மதுரை : இன்று 303 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

துரை

ன்று ஒரே நாளில் மதுரை மாவட்டத்தில் 303 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் எங்கும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது,  இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 3949 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டு மொத்த எண்ணிக்கை 86,224 ஆகி உள்ளது.  இதில் சென்னை மாவட்டத்தில் அதிக அளவில் பாதிப்பு உள்ளது.  இன்று 2167 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சமீபகாலமாக சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களுக்குச் சமமாக மற்ற மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது   இதற்கு தற்போது கொரோனா பரிசோதனை எண்ணிக்கை அதிகரித்துள்ளதே காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இன்று தமிழகத்தில் 30.039 மாதிரிகள் சோதிக்கப்பட்டுள்ளன.

சென்னைக்கு அடுத்தபடியாக  இன்று மதுரை மாவட்டத்தில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது  இங்கு இன்று ஒரே நாளில் 303 பேருக்குப் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.  மதுரை மாவட்டத்தில் இதுவரை 2302 பேர் பாதிக்கப்பட்டு 29 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 609 பேர் குணமடைந்து தற்போது 1664 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.