இந்தியா – பாகிஸ்தான் ஒரு நாள் தாக்குதல் நிறுத்தம்

டில்லி

ந்திய பாகிஸ்தான் எல்லையில் இன்று ஒரு நாள் எவ்வித தாக்குதலும் நடக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே அவ்வப்போது எல்லையில் தாக்குதல் நடைபெற்று வந்தன.  அதையொட்டி கடந்த 2003 ஆம் ஆண்டு இரு நாடுகளும் வருடத்தில் ஒரு நாள் எந்த தாக்குதலும் நடத்தாது என ஒப்பந்தம் இட்டன.

அதன்படி இன்று அதாவது 24 ஆம் தேதி நள்ளிரவு முதல் 25 நள்ளிரவு வரை ஒரு நாட்டு ராணுவத்தினர் மற்ற நாட்டு ராணுவத்தினர் மீது துப்பாக்கிச் சூடு மற்றும் எவ்வித ஆயுத தாக்குதலும் நடத்த மாட்டோம் என உறுதி அளித்துள்ளனர்.

ஆயினும் இந்த அறிவிப்பு ராணுவத்தில் அமைதிக்கானது என ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.   மேலும் தீவிரவாதிகள் மீதான எதிர் நடவடிக்கைகள் வழக்கம் போலத் தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.