நிலவின் சுற்று வட்டப்பாதையில் நுழைந்தது சந்திரயான்2!

ஸ்ரீஹரிகோட்டா:

நிலவை ஆய்வு செய்ய ஏவப்பட்ட சந்திரயான்-2 விண்கலம், புவி வட்டப்பாதைத் சுற்றியதைத் தொடர்ந்து இன்று நிலவின் சுற்று வட்டபாதையில் புகுந்து சுற்றத்தொடங்கி உள்ளது. இதை இஸ்ரோ அறிவித்து உள்ளது.

கடந்த மாதம் (ஜூலை) 22ம் தேதி ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான் 2 விண்கலம், 22 நாட்களாக புவி வட்டப் பாதையை சுற்றி வந்தது. சுற்று வட்டப்பாதை 5முறை  உயர்த்தப்பட்ட நிலையில், கடந்த (ஆகஸ்டு) 14ந்தேதி அன்று அதிகாலை புவி வட்டப்பாதையை கடந்து நிலவை நோக்கி பயணத்தை தொடங்கியது.

இந்த நிலையில், இன்று   புவி வட்டப்பாதையில் இருந்து விலகி நிலவின் வட்டபாதையில் சந்திரயான்-2 புகுந்து  சுற்றத்தொடங்கி உள்ளது. இது 6வது முறையாக சுற்றுவட்டபாதை மாற்றப்பட்ட நிகழ்வாகும்.  இந்த விண்கலத்துடன், ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் ஆகிய 3 கலன்களும் சேர்த்து பயணித்து வருகின்றன.

செப்டம்பர் 7ம் தேதி நிலவின் தென்துருவ பகுதியில் விக்ரம் லேண்டர் தரையிறங்கும் என்று இஸ்ரோ அறிவித்து உள்ளது.

கார்ட்டூன் கேலரி