இன்று ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை: வழிபட உகந்த நேரம்…!

ல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவியையும், நம் தொழிலுக்கும், ஜீவனத்திற்கும் துணை புரியும் கருவிகளையும் பூஜை செய்து வணங்கும் நாளே சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை நாளாகும்.

உடல் வலிமையின் சக்தியாக துர்க்கா தேவியையும், வாழ்க்கைக்குத் தேவையான செல்வத்தை தரவல்ல சக்தியாக மஹாலட்சுமியையும், அறிவையும் ஆற்றலையும் தரவல்ல கல்வியின் தேவதையாக சரஸ்வதி தேவியையும் நாம் வழிபட்டு அந்த தேவியரின் அருள் பெற்று வலிமை, செல்வம், கல்வி ஆகிய மூன்றினையும் பெறுவதற்காக ஏற்படுத்தப்பட்ட பண்டிகையே நவராத்திரி எனப்படும்.

முதல் மூன்று நாட்கள் துர்க்கைக்கும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமிக்கும், அடுத்த மூன்று நாட்கள் சரஸ்வதிக்கும் உரியவை. 10ம் நாள் மூன்று தேவியரும் சேர்ந்து பராசக்தியாக தோன்றி, மகிஷ்சாசுர அரக்கனை வதம் செய்ததாக புராணங்கள் கூறுகின்றன.

நவராத்திரியின் ஒன்பது தினங்களை அடுத்து ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி கொண்டாடப்படுகிறது.

நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஆயுதங்களின் பயனை உணர்த்தவே ஆயுத பூஜை செய்யப்படு கிறது. சரஸ்வதி பூஜையன்று தொழில் நிறுவனங்களில் அங்குள்ள கருவிகளுக்கும், வீடுகளில் அன்றாட பயன்பாட்டு பொருட்களுக்கும் பூஜை செய்ய வேண்டும். செய்யும் தொழிலே தெய்வம். அந்தத் தொழிலுக்கு உதவிகரமாக இருக்கும் ஆயுதங்களைத் தெய்வமாகப் போற்றும் விதமாக, அவற்றையும் கடவுளாகப் பாவித்து வணங்குவதே ஆயுதபூஜை . சரஸ்வதி பூஜையன்று மாலையில் தொழில் உபகரணங்களை சுத்தம் செய்து பூஜை செய்ய வேண்டும்.

மறுநாள் விஜயதசமியன்று அவற்றை எடுத்து தொழிலைத் துவங்கினால், ஆண்டு முழுவதும் தொழில் வளம் சிறப்பாக இருக்கும் என்பது ஐதீகம். ஜடப்பொருட்களிலும் தெய்வத்தைக் காண்பதே ஆயுதபூஜையின் நோக்கம். குழந்தைகள் படிப்பைத் துவங்கவும் இந்தநாளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்

இந்த ஆண்டு ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையை வழிபட உகந்த நேரங்களை தெரிந்து கொள்வோம்.

சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை  வழிபாடு செய்ய நல்ல நேரம்: (18-10-18)

காலை :

வசு முகூர்த்தம் காலை  09:25  முதல் 10:13  வரை

வராஹ முகூர்த்தம் காலை  10:14  முதல் 10:48  வரை

பகல் :

சுதாமுகீ முகூர்த்தம் 12:41 முதல் 01:29 வரை

மாலை :

அர்யமன் முகூர்த்தம் மாலை 04:46  முதல் 05:32வரை

பக முகூர்த்தம் மாலை  05:33 முதல் 06:21 வரை

கிரீச முகூர்த்தம் மாலை  06:22 pஅ முதல் 07:10 pஅ வரை

விஜயதசமி அன்று வழிபாடு செய்ய நல்ல நேரம் (19-10-18)

காலை :

ருத்ர முகூர்த்தம் காலை  06:15  முதல் 07:03 வரை

ஆஹி முகூர்த்தம் காலை 07:04 முதல் 07:49 வரை

மித்ர முகூர்த்தம் காலை 07:50  முதல் 08:35 வரை

பித்ரு முகூர்த்தம் காலை 08:36 முதல் 09:15 வரை

மாலை :

அர்யமன் முகூர்த்தம் மாலை 05:15 முதல் 05:32 வரை

பக முகூர்த்தம் மாலை 05:33 முதல் 06:15 வரை

அஹிர்புத்ன்ய முகூர்த்தம் இரவு  08:15 முதல் 08:48 வரை

புஷ்ய முகூர்த்தம் இரவு 08:49 முதல் 09:15 வரை

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை : வழிபாடு செய்வது எப்படி?

ஆயுத பூஜை:

ஆயுதம் என்பதன் உண்மையான பயனை உணர்த்தத்தான் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. ஆயுத பூஜை அன்று செய்யும் தொழில் நன்கு விருத்தி அடைவதற்காக தங்கள் தொழிலுக்கு பயன்படுத்தப்படும் கருவிகள், இயந்திரங்கள், ஆயுதங்கள், இசைக்கருவிகள் போன்ற பொருட்களை நன்கு சுத்தப்படுத்தி பூஜை செய்வார்கள்.

ஆயுத பூஜை நவராத்திரியின் 9ம் நாள் கொண்டாடப்படுகிறது. இவ்வருடம் ஆயுத பூஜை ஐப்பசி 1ம் நாள் 18.10.2018 அன்று கொண்டாடப்படுகிறது.

வழிபடும் முறை :

அன்றைய நாள் வீடு, கடைகளை சுத்தம் செய்ய வேண்டும். சுத்தம் கடவுளின் இருப்பிடமாகும். அன்றைய நாள் வாகனங்களையும் சுத்தம் செய்தல் அவசியம். தங்கள் தொழிலுக்கு பயன்படுத் தப்படும் கருவிகள், இயந்திரங்கள், ஆயுதங்கள் போன்றவற்றை சுத்தம் சுத்தம் செய்து, பின் அவற்றிற்கு பூஜை செய்ய வேண்டும். தங்கள் தொழிலுக்கு பயன்படுத்தப்படும் ஆயுதங்களை கடவுளாக எண்ணி பூஜை செய்ய வேண்டும்.

பூஜையின்போது பொரி, பழங்கள், பேரீச்சம்பழம் போன்றவற்றை நைவேத்தியமாக படைத்து வழிபடலாம்.

ஆயுத பூஜையின் சிறப்பு :

செய்யும் தொழிலே தெய்வம். நாம் செய்யும் தொழிலுக்கு உதவிகரமாக இருக்கும் ஆயுதங்களை கடவுளாக போற்றி வணங்குவது ஆயுத பூஜையின் நோக்கமாகும்.

சரஸ்வதி பூஜை:

கல்வி அறிவைத் தந்து நம்மை வல்லவர்களாக்கும் சக்தி படைத்தவள் சரஸ்வதி தேவி. கலைவாணியான சரஸ்வதி தேவியை பிரதானமாகக் கருதி, ஆராதனை செய்து வணங்கும் நாள் தான் சரஸ்வதி பூஜை.

சரஸ்வதி தேவியை வணங்குவதன் மூலம் கல்விச்செல்வம் பெருகும். குழந்தைகளின் கல்வி சிறந்து விளங்க சரஸ்வதி தேவியை வணங்க வேண்டும்.

வழிபடும் முறை :

சரஸ்வதி பூஜை அன்று அதிகாலை வீட்டை சுத்தம் நீராடுவதை முடித்து விட வேண்டும். ஒரு சிறிய மேஜையில் சரஸ்வதி படம் அல்லது மஞ்சள், சந்தனத்தில் செய்த முகம் வைக்க வேண்டும். படத்திற்கு அருகம்புல், மலர் மாலைகள் அணிவிக்க வேண்டும்.

மேஜையின் மேல் புத்தகங்களை அடுக்கி, படத்தின் முன் வாழையிலையை விரித்து வெற்றிலைப் பாக்கு, பழம், பொரி, சுண்டல், சர்க்கரைப் பொங்கல் ஆகியவற்றைப் படைக்க வேண்டும்.

அதன் பிறகு சரஸ்வதி தேவிக்கு நெய்தீபம் காட்டி வழிபாடு செய்ய வேண்டும்.

சிறு குழந்தைகளுக்கு பிரசாதம், கல்வி உபகரணங்கள் போன்றவற்றை கொடுக்க வேண்டும்.

மறுநாள், காலையில் புதிதாக இலைபோட்டு வெற்றிலை பாக்கு, பழம், பொரி படைத்து பூஜை செய்த பின் சரஸ்வதி படத்தை எடுத்து விட வேண்டும்.

மஞ்சள் அல்லது சந்தனத்தில் முகம் வைத்திருந்தால் அதை நீர்நிலையில் கரைத்து செடிகளுக்கு ஊற்றலாம்.

சரஸ்வதி பூஜையின் சிறப்பு :

நவராத்திரி நாட்களில் அன்னையின் அருள்பெற ஒன்பது நாட்களும் விரதமிருந்து பூஜிக்க இயலாத வர்கள் சரஸ்வதி பூஜையன்று மட்டும் அம்மனை பூஜித்து வணங்கினால் அம்பிகையின் அருள் பூரணமாய் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

கல்வி, கலைகளில் தேர்ச்சி, ஞானம், நினைவாற்றல் போன்றவை வேண்டி கலைமகளை பிரார்த்திக்கும் திருநாளாகும்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Today Ayudha Pooja and Saraswathi Pooja celebration.... The best time to worship ...!
-=-