சென்னை

சென்னையில் இன்று 686 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த பாதிப்பு 2 லட்சத்தை தாண்டியது.

சென்னையில் கொரோனா பாதிப்பு இன்று மேலும் சற்று குறைந்துள்ளது.

இன்று தமிழகத்தில் 2504 பேர் பாதிக்கப்பட்டு மொத்தம் 7,27,026 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.

இதில் சென்னையில் மட்டும் 686 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை சென்னையில் 2,00,533 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று 11 பேர் உயிர் இழந்து மொத்தம் 3,662 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இன்று 792 பேர் குணம் அடைந்து மொத்தம் 1,89,866 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது சென்னையில் 7,005 பேர் சிகிச்சையில் உள்ளனர்.