சென்னை
மிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2608 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,22,011 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 11,091 பேர் உயிர் இழந்து 6,87,388 பேர் குணம் அடைந்து தற்போது 23,532 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
சென்னையில் மட்டும் இன்று 723 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.
இதுவரை சென்னையில் 1,99,173 பேர் பாதிக்கப்பட்டு 3,639 பேர் உயிர் இழந்து 1,88,280 பேர் குணம் அடைந்து தற்போது 7254 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அடுத்ததாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 43,481 பேர் பாதிக்கப்பட்டு 672 பேர் உயிர் இழந்து 41,723 பேர் குணம் அடைந்து தற்போது 1,086 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மூன்றாவதாக கோவை மாவட்டத்தில் 43,008 பேர் பாதிக்கப்பட்டு 556 பேர் உயிர் இழந்து 40,041 பேர் குணம் அடைந்து தற்போது 2,411 பேர் சிகிச்சையில் உள்ளனர்.