இந்தோனேசியாவில் இன்று அதிகாலை பயங்கர நில நடுக்கம்

ஜகார்தா:

ந்தோனேசியாவில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது  ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவாகி உள்ளது.

நேற்று  தெற்கு பசிபிக்கில் பகுதியில் உள்ள நியு கலிடோனியாவில் கடலுக்கு அடியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது  7.5 என்ற ரிக்டர் அளவில் இருந்ததுடன் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று இந்தோனேசியாவின் மேற்கு நுசா தெங்கரா மாகாணத்தில் உள்ள தீவுப்பகுதியான லம்போக்  பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 1.02 மணிக்கு ஏற்பட்ட இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 5.5 ஆக பதிவாகி உள்ளது.

நில நடுக்கம் காரணமாக வீடுகள் கட்டிங்கள் அதிர்ந்ததால், பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு தெருவுக்கு ஓடி வந்தனர். இதன் காரணமாக சில மணி நேரம் பரபரப்பு நிலவியது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த தகவலும் வெளியாகவில்லை.