ண்டன்

ங்கிலாந்து நாட்டில் இன்று முதல் உலகில் முதல் முறையாக பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி தொடங்குகிறது.

உலகெங்கும் அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கான தடுப்பூசியை பிஃபிஸர் நிறுவனம் கண்டறிந்து சோதனையில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டது.  இதையொட்டி இந்நிறுவனம்  உலகெங்குங்கும் உள்ள பல நாடுகளுக்கும் அவசர பயன்பாட்டுக்கான அநுமதியை கோரியது.   இதில் முதல் நாடாக இங்கிலாந்து அனுமதி அளித்துள்ளது.

இதையொட்டி இன்று முதல் இங்கிலாந்தில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி அளிக்கும் பணி தொடங்க உள்ளது,.  இதற்காக இங்கிலாந்துக்கு நிறுவனம் 8 லட்சஃம் டோஸ் மருந்துகள் அனுப்பப்பட்டுள்ளன.  இந்த ஊசி வழங்கல் முதலில் 80 வயதுக்கு மேற்பட்டோருக்கும், முன் களப்பணியாளர்களுகும் வழங்கப்பட உள்ளது.  சுமார் 2.5 கோடி பேருக்கு இந்த முதல் கட்டத்தில் த்டுப்பூசி செலுத்தப்பட உள்ளது.

இங்கிலாந்து நாட்டின் தேசிய சுகாதாரத்துறை, “தடுப்பூசி செலுத்த யாரும் எங்களை அழைக்க வேண்டாம்.  தகுதியுள்ளவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் நாங்களே வழங்குவோம்.  அதன் பிறகு கட்டம் கட்டமாக அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தபடும்.” எனத் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவில் ஏற்கனவே கடந்த சனிக்கிழமை அன்று தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கபட்டுள்ளது.   ஆனால் ரஷ்யா தயாரித்துள்ள ஸ்|புட்னிக் வி தடுப்பூசி முறையாக மூன்று கட்ட சோதனைகளையும் முடிக்கும் முன்பே அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.