‘கஜா’ புயல் எச்சரிக்கை: தலைமை செயலாளர் தலைமையில் இன்று அவசர கூட்டம்

--

சென்னை:

ங்கக் கடலில் உருவாகியுள்ள ‘கஜா’ புயல், வரும் வியாழக்கிழமையன்று கடலூர் – ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தலைமை செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் தலைமையில் இன்று மாலை அவசர கூட்டம் நடைபெற உள்ளது.

வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம்  புயலாக மாறி உள்ளது. இந்த புயலுக்கு கஜா என்று பெயரிடப்பட்டு உள்ளது. இந்த புயல் தற்போது வங்கக்கடலில்,   சென்னைக்கு வடகிழக்கே 840 கிலோ மீட்டர் தூரத்திலும், நாகைக்கு வடகிழக்கே 880 கிலோ மீட்டர் தூரத்திலும் மையம் கொண்டிருந்தது.இந்த புயல் மேலும் தீவிரமடைந்து, தமிழக கரையோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், புயல் பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்கும்பொருட்டு எடுக்கப்பட வேண்டிய முன் எச்சரிக்கை  நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தலைமையில் இன்று மாலை அவசர  கூட்டம் நடைபெறவுள்ளது

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ள கூட்டத்தில், அரசு அதிகாரிகள், பேரிடர் மேலாண்மைதுறை அதிகாகள் உள்பட பல அதிகாரிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.