Random image

தமிழகம் முழுவதும் 412 நீட் பயிற்சி மையங்களில் இன்று மாலை நீட் பயிற்சி தொடக்கம்!

சென்னை:

மிழகத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் பிளஸ்2 மாணவ மாணவிகளுக்கு, தேசிய தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் நீட் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த கல்வி ஆண்டுக்கான பயிற்சி இன்று மாலை தொடங்குகிறது. தமிழக்ததில் உள்ள 412 நீட் பயிற்சி மையங்களில் இன்று மாலை முதல் நீட் தேர்வு பயிற்சி தொடங்கப்படுகிறது.

3200 ஆசிரியர்கள் காணொலியில் பயிற்சி அளிக்க இருப்பதாக தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.

தமிழக கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை புகுத்தி வரும் கல்வி அமைச்சர் செங்கோட்டையன், மத்திய அரசு கொண்டுவந்துள்ள நீட் நுழைவுத்தேர்வை எதிர்கொள்ளும் வகையில் அரசு பள்ளி மாணவ மாணவி களுக்கு இலவசமாக நீட் பயிற்சி வழங்க முடிவு செய்து நீட் பயிற்சி மையங்களை ஏற்படுத்தி உள்ளார்.

ஏற்கனவே வேலைவாய்ப்பு பெறும் வகையில் பாடத்திட்டங்கள் மாற்றப்பட்ட வரும் நிலையில்,  மாணவர்கள் அனைவருக்கும் சிறந்த நூலக வசதியை தர வேண்டும் என்ற அடிப்படையில் அனைத்து மாவட்டங்களுக்கும் நடமாடும் நூலகங்கள,  ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் சிறந்த ஆங்கிலத்தை கற்று தர ஏற்பாடு,

மாணவர்கள் தொழில் கல்வியை பெறும் வகையில் அந்தந்த மாவட்டங்களில் எந்த தொழிலுக்கு சிறப்பு இருக்கின்றதோ அதன் அடிப்படையில் வரும் கல்வி ஆண்டில் 12 பாடப் பிரிவுகள் தொடங்கி செயல்படுத்த நடவடிக்கை, ஓட்டல் நிர்வாகம், மருத்துவமனை நிர்வாகம் போன்ற படிப்புகள், வேளாண்மை தொழில் சார்ந்த பயிற்சியும், காய்கறிகளை பதப்படுத்துதல் போன்ற பயிற்சியும், ஜவுளி தொழில் குறித்த பயிற்சி போன்றவை அளிக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதுபோல  மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஏற்கனவே அறிவித்தபடி பிளஸ்2 படிக்கும் மாணவ மாணவிகளுக்கு நீட் பயிற்சி இன்று மாலை தொடங்குகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 412 மையங்களில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 3200 ஆசிரியர்கள் காணொலியில் பயிற்சி அளிக்க இருப்பதாக தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.

இதன் மூலம் வரும்  காலங்களில் தமிழகம் நீட் தேர்வில் முன்னணி மாநிலமாக திகழும் என்றும் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

கடந்த ஆண்டு தமிழக அரசு சார்பில் அறிமுகப்படுத்தப்பட்ட நீட் தேர்வு பயிற்சி மையம் 4 வாரங்கள் மாணவ மாணவிகளுக்கு பயிற்சி கொடுத்த நிலையில்,   நீட் தேர்வில் ஏறக்குறைய 1412 மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.