தராபாத்

ஷ்ய கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக் வி முதல் தடுப்பூசி ஐதராபாத்தில் இன்று போடப்பட்டுள்ளது.

இந்தியாவில் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகிய இரு தடுப்பூசிகளுக்கு இந்திய அரசு அவசர கால அனுமதி அ:அளித்திருந்தது.  சமீபத்தில் மூன்றாவதாக  ரஷ்ய தடுப்பூசியான ஸ்புட்னிக் வி மருந்துக்கு அவசர கால அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.   ஐதராபாத்தில் உள்ள டாக்டர் ரெட்டி நிறுவனம் இதை இந்தியாவில் விநியோகம் செய்கிறது.  மே மாதம் 1 ஆம் தேதி 1.5 லட்சம் டோஸ் தடுப்பூசி வந்துள்ளன.

இந்த தடுப்பூசி கோஒர்னாவுக்கு எதிராக 91.6% செயல்திறன் உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.  இன்று ஐதராபாத் நகரில் முதல் முறையாக தீபக் சப்ரா என்பவர் இந்த முதல் ஊசியைப் பொட்டுக் கொண்டுள்ளார்.  இவர் கஸ்டம் ஃபார்மா சர்வீஸஸ் என்னும் நிறுவனத்தின் தலைவர் ஆவார்.  தற்போது இந்த மருந்து ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

இந்த ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு 5% ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது.  அதன் அடிப்படையில் இந்த தடுப்பூசியின் விலை ரூ.965.40 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  இதில் ஜிஎஸ்டி மட்டும் ரூ.47 ஆகும்.   நாடெங்கும் கிஒரோனா பரவலால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் தடுப்பூசி மீதான ஜிஎஸ்டி வரியை தள்ளுபடி செய்யப் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.