ராகுலுக்கு பாரம்பரிய முறைப்படி மாலை அணிவித்து காங்கிரசில் இணைந்தார் பாஜக எம்.பி. கீர்த்தி ஆசாத்

டில்லி:

முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாஜக எம்.பி.யுமான  கீர்த்தி ஆசாத் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் ராகுல்காந்திக்கு மிதிலா ஸ்டைலில் மாலை மற்றும் பிங்க் கலர் தொப்பி அணிவித்து  தன்னை காங்கிரஸ் கட்சியில்  இணைத்துக்கொண்டார்.

பீகார் மாநிலம் தர்பாங்கா தொகுதியில் இருந்து பா4க சார்பில் போட்டியிட்டு  3 முறை வெற்றி பெற்று எம்.பி.யாக தேர்ந்தடுக் கப்பட்டவர் முன்னாள் கிரிக்கெட் வீரர் கீர்த்திஆசாத்.  இவர் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி குறித்து விமசனம் செய்தால், பாஜகவில் இருந்து நீக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில்  இன்று  ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். ‘அக்பர் ரோட்டில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் ராகுலுக்கு பாரம்பரிய முறைப்படை மிதிலா ஸ்டாலின் மலர் மாலை மற்றும் தொப்பி அணிந்து காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.

Leave a Reply

Your email address will not be published.