முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி  பிறந்தநாள்!
rajiv
 மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் 65வது பிறந்த தினம் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது.
ராஜீவ் காந்தி மிகவும்  தமது 40 வயதிலேயே இந்தியாவின் பிரதமரானார். அதுமட்டுமல்ல, உலகிலேயே இளம் வயதில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் தலைவர்களில்  இவரும் ஒருவர்.                          இந்திரா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டதும் ராஜீவ்காந்தி பிரதமராக காங்கிரஸ் தலைவர்களால் தேந்தெடுக்கப்பட்டார்.  அதன்பிறகு நடைபெற்ற மக்களவை தேர்தலில்  வரலாறு காணாத அளவுக்கு காங்கிரஸ் வென்றது. 508 தொகுதிகளில் 401 தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றியது.
ராஜீவ்காந்தி 1944 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20 ஆம் தேதி பம்பாயில் பிறந்தார். அவருக்கு 3 வயது நடக்கும்போது இந்தியா சுதந்திரம் பெற்று அவரது தாத்தா பிரதமரானார்.  பள்ளி படிப்பை இந்தியாவில் முடித்தார்.
மேற்படிப்புக்கா ராஜீவ் காந்தி கேம்பிரிட்ஜ்ஜில் உள்ள டிரினிட்டி கல்லூரியில்  சேர்ந்த்ர். பின்னர் லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரிக்கு மாற்றப்பட்டார். அவர் இயந்திர பொறியியல் படிப்பை படித்தார்.
அவருடைய பொழுதுபோக்கு, புகைப்படம்  எடுப்பது மற்றும் அமெச்சூர் ரேடியோவில் இசை கேட்பது.  அவருக்கு மிகவும் பிடித்தமானது  விமானம் ஓட்டுவது.
மேற்படிப்பு முடிந்ததும்  விமானம் ஓட்ட பயிற்சி பெற்று  தேர்ச்சி பெற்றார்.  இந்தியன் ஏர்லைன்சில் விமான ஓட்டுநராகச் சேர்ந்தார்.
1968-ல் அவருடன் கேம்பிரிட்ஜ் கல்லூரியில் படித்த சோனியாபவை புதுதில்லியில் திருமணம் செய்து கொண்டனர்.  ராகுல் மற்றும் பிரியங்காவுடன் புதுதில்லியில் உள்ள திருமதி. இந்திராகாந்தியின் இல்லத்தில் இருந்தனர்.
                1984 அக்டோபர் 31 அன்று அவரது தாயார் கொடுமையான முறையில் சுட்டு கொல்லப்பட்டார். இந்த இக்கட்டான சூழ்நிலையில் பிரதமராகவும் காங்கிரஸ் தலைவராகவும் பொறுப்பேற்றார். நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்த 250 பொது கூட்டங்களில் கோடிகணக்கான மக்களைச் சந்தித்துப் பேசினார்.
இதன் காரணமாக இந்தியர்கள் மனதில் இடம் பிடித்தார்.
வரலாற்றில் இன்று :

  • உலக கொசு ஒழிப்பு தினம்
  • நேபாள் தந்தையர் தினம்
  • இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் பிறந்த தினம்(1944)
  • ஹங்கேரி நாடு, முதலாம் ஸ்டீபன் என்பவரால் உருவாக்கப்பட்டது(1000)
  • இலங்கையில் ஒரு ரூபாய் தாள் வழங்கப்பட்டது(1917)
  • இலங்கை குடியுரிமை சட்டம், இலங்கை நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது(1948)