ரியாத்:

வூதி உள்படமத்திய கிழக்கு நாடுகளில் பிறை தெரிந்ததால், இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் நாளை ரம்ஜான் கொண்டாடபபடுகிறது.

ரமலான் நோன்பு முடிந்ததன் நிறைவாக, பிறை தெரியும் நாட்கள் ரம்ஜான் கொண்டாடப்படுவழ வழக்கம். இஸ்லாமிய நாடுகளில் கொண்டாடப்படும் ஈதுல் பித்ர் எனப்படும் ரம்ஜான் பண்டிகை ஷவ்வால் முதல்பிறை தினத்தன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.  புவியியல் அமைப்புக்கு ஏற்ப ஒவ்வொரு நாட்டிலும் முதல்பிறை தோன்றுவதற்கேற்ப அந்நாடுகளில் ரம்ஜான் கொண்டாடப்படும்.

இந்த ஆண்டு முதல்பிறை மத்திய கிழக்கு நாடுகளில் தெரிந்ததால் சவுதி அரேபியா, கத்தார், பஹ்ரைன், குவைத் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் ரம்ஜான் திருநாள்  கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பல பகுதிகளில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினார்

தமிழகத்தில் நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய சகோதரர்களுக்கு பத்திரிகை.காம் ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெருமை அடைகிறது.