கொரோனா : இன்று தமிழகத்தில் 4150 பேருக்குப் பாதிப்பு

சென்னை

இன்று தமிழகத்தில் 4150 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 1,11,151 ஆகி உள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இன்று 34,102 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 4150 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் சென்னையில் 1713 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

அடுத்தபடியாக மதுரையில் 305 பேருக்கும் செங்கல்பட்டில் 245 பேருக்கும் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

தமிழகத்தில் மொத்த பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,11,151 ஆகி உள்ளது.

இன்று தமிழகத்தில் கொரோனாவால் 60 பேர் உயிர் இழந்துள்ளனர்.

மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1510 ஆகி உள்ளது.

இன்று தமிழகத்தில் 2186 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இதுவரை மொத்தம் 62778 பேர்  குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

கார்ட்டூன் கேலரி