இன்றையப் போட்டி – பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ் மோதல்!

ஷார்ஜா: நடப்பு ஐபிஎல் தொடரின் இன்றையப் (அக்டோபர் 5) போட்டியில், கோலியின் பெங்களூரு அணியும் டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதுகின்றன.

இரண்டு அணிகளும் இதுவரை ஆடியுள்ள 4 போட்டிகளில், 3 வெற்றி மற்றும் 1 தோல்வி என்று புள்ளிப் பட்டியலில் சமநிலையில் உள்ளன.

இன்றையப் போட்டியை வெல்லும் பட்சத்தில், புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறலாம். இரண்டு அணிகளுமே தற்போதைய நிலையில் எழுச்சி கண்ட அணிகளாக உள்ளன. முதல் 3 போட்டிகளில் சொதப்பி வந்த கேப்டன் கோலி, கடந்த போட்டியில் சிறப்பான ஃபார்முக்கு திரும்பினார்.

டெல்லி அணியைப் பொறுத்தவரை, கேப்டன் ஷ்ரேயாஸ் நல்ல ஃபார்மில் இருக்கிறார். இன்றையப் போட்டியை வெல்வதற்கு இரண்டு அணிகளும் கடும் முயற்சி செய்யும் என்று எதிர்பார்க்கலாம்.