இன்று 33வது நாள்: டில்லியில் தமிழக விவசாயிகள் தாலியறுக்கும் போராட்டம்

டில்லி,

லைநகர் டில்லி ஜந்தர் மந்திரில் போராடி வரும் தமிழக விவசாயிகளின் போராட்டம் இன்று 33வது நாளை எட்டியுள்ளது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரைநிர்வாண நிலையில் பேல்வேறு வகையான நூதன போராட்டங்களை நடத்தி வருகிறார்கள் அய்யாக்கண்ணு தலைமையிலான தமிழக விவசாய சங்கத்தினர்.

இறந்த விவசாயிகளின் மண்டை ஓட்டுடன் பிச்சை எடுத்தும், எலிக்கறி, பாம்புக்கறி சாம்பிட்டும், நிர்வாணம், மண்சோறு, சேலை கட்டுதல் போன்ற பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இன்று 33வது நாளாக போராட்டம் நடைபெறுகிறது.  இன்று தாலை அறுக்கும் போராட்டம் நடைபெறுவதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயி ஒருவர் கூறியதாவது,

நாங்கள் விவசாயத்துக்காக  வங்கியில் நாங்கள் வாங்கிய கடனுக்கு, அதிகாரிகளின் கடுமையான வார்த்தைகள் எங்கடிள  தற்கொலை செய்து கொள்ள தூண்டுகிறது.

“வாங்கிய கடனை கொடுக்கு வாக்கில்லை. உனக்கு எதுக்கு மீசை” என கேட்கிறார்கள். அதற்காகவே மீசையை பாதியாக மழித்தோம். “நீ எதுக்கு ஆம்பளையா இருக்கே. பொண்டாட்டி புடவையை கட்டிக்கோ” என்றனர். இதனால், நேற்று புடவையை கட்டி போராடினோம்.

“உன் பொண்டாட்டி தாலியை விற்று பணத்தை கட்ட வேண்டியதுதானே” என கேட்டனர். அதற்காக நாங்கள், இன்று தாலி அறுக்கும் போராட்டத்தை நடத்துகிறோம் என்றனர்.

இவ்வளவு போராட்டம் நடத்தியும், பிரதமர் நரேந்திர மோடி எங்களை பார்க்க வரவில்லை. விவசாயிகளின் வாழ்வுக்கு நல்ல பதிலை கூற வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Leave a Reply

Your email address will not be published.