இன்று நல்ல நாள்…..அரசியல் மாற்றம் ஏற்பட்டு புதிய அரசுகள் அமைவதற்கு நாம் வாக்களிப்போம்…! ப.சிதம்பரம்

சென்னை:

ன்று நல்ல நாள். இந்திய நாட்டிலும் தமிழ் நாட்டிலும் நாம் விரும்பும் அரசியல் மாற்றம் ஏற்பட்டு புதிய அரசுகள் அமைவதற்கு நாம் வாக்களிப்போம் என்று தனது வாக்கினை செலுத்திய ப.சிதம்பரம் வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இன்று தமிழகம் முழுவதும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சிதலைவர்கள், திரையுலக பிரபலங்கள் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தனது வாக்கினை  தனது சொந்த தொகுதியான சிவகங்கை தொகுதியில் செலுத்தினார்.

சிவகங்கை தொகுதியில், திமுக காங்கிரஸ் கூட்டணி கட்சி சார்பில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அதிமுக பாஜக கூட்டணி சார்பில் எச்.ராஜா போட்டியிடுகிறார். அங்கு இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.

இன்று வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் தனது வாக்கை செலுத்திய ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் பேசும்போது,  இன்று நல்ல நாள். இந்திய நாட்டிலும் தமிழ் நாட்டிலும் நாம் விரும்பும் அரசியல் மாற்றம் ஏற்பட்டு புதிய அரசுகள் அமைவதற்கு நாம் வாக்களிப்போம் என்றும்,  சுதந்திரம், ஜனநாயகம், சுயமரியாதை, மனித உரிமைகள், எம்மதமும் சம்மதம், பகுத்தறிவு, பொருளாதார முன்னேற்றம், தமிழ் இன மாண்பு ஆகிய குணங்கள் வெல்ல வாக்களிப்போம் என்று கூறினார்.

கார்ட்டூன் கேலரி