‘ஜனநாயகத்தின் கறுப்பு நாள் இன்று’ கேரளா முதல்வா் பினராயி விஜயன் கடும் விமர்சனம்

--

திருவனந்தபுரம்:

ர்நாடகாவில் பாரதியஜனதா கட்சிக்கு பெரும்பான்மை இல்லாத நிலையிலும், மாநில கவர்னர் வஜுபாய் வாலா பாஜவுக்கு அழைப்பு விடுத்து, இன்று காலை எடியூரப்பாவுக்கு முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

கவர்னரின் இந்த நடவடிக்கைக்கு நாடு முழுவதும் கடும் கண்டங்கள் எழுந்து வருகின்றன. அனைத்து கட்சிகளும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றன.

இந்நிலையில்,கவர்னரின் அத்துமீறிய செயலுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ள கேரள முதல்வர்  பினராயி விஜயன், கர்நாடகாவில் எடியூரப்பாவுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்த நாளான இன்று ஜனநாயகத்தின் கறுப்பு நாள் என்று கருத்து தொிவித்துள்ளார்.

கர்நாடகாவில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்காத நிலையில், ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கும்படி  குமாரசாமி கவர்னரை சந்தித்து பேசினார். குமாரசாமி தலைமையிலான   மதசார்பற்ற ஜனதாதளம், காங்கிரஸ் கூட்டணி 116 இடங்களை வைத்துள்ள நிலையில், 104 இடங்களை பிடித்த பாஜகவை ஆட்சி பொறுப்பு ஏற்க கவர்னர் அழைப்பு விடுத்தார். இது சலசலப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து உச்சநீதி மன்றத்தில் நேற்று நள்ளிரவு அவசர வழக்காக வும் விசாரிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று காலை கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவி ஏற்றுள்ளார். அவருக்கு மாநில கவர்னர் வஜுபாய் வாலா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடா்பாக கேரளா முதல்வா் பினராயி விஜயன் கடுமையாக விமர்சனம் செய்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.

அதில்,  “இன்று கா்நாடகாவின் துயரமான நாள். இந்திய ஜனநாயகத்தின் கறுப்பு நாள். கர்நாடகாம் மற்றும் இந்திய ஜனநாயகத்திற்கு  ஒரு சோகமான நாள். கர்நாடகா கவர்னர் பிஜேபிக்கு அழைப்பு விடுக்கும் முடிவை நீதித்துறை மறு ஆய்வு செய்ய வேண்டும்.
 இது போன்ற செயல்பாடுகள் ஆளுநர் என்ற பதவியின் மாண்பை குறைத்து விடும். ஆளுநரின் இச்செயல் குதிரை பேரத்திற்கு வழிவகை செய்யும்” என்று கருத்து தொிவித்துள்ளாா்.