திமுக தலைவர் கருணாநிதியின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் : முக ஸ்டாலின் அஞ்சலி

சென்னை

ன்று முன்னாள் முதல்வர் மற்றும் திமுக தலைவர் கருணாநிதியின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி திமுக தலைவர் முக் ஸ்டாலின் அவர்  நினைவிடத்தில்,மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

திமுக தலைவர் மற்றும் முன்னாள் முதல்வர் மு கருணாநிதியின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

இதையொட்டி சென்னை மெரினா கடற்கரையில்  அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

அவருடன் திமுக பொருளாளர் துரைமுருகன், இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மக்களவை உறுப்பினர்கள், கனிமொழி, தயாநிதி மாறன், கலாநிதி வீராச்சாமி உள்ளிட்ட பலரும் மலர் தூவி மரியாதை செய்தனர்.

இதைத் தொடர்ந்து முக ஸ்டாலின் மறைந்த கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தில் உள்ள அவரது உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தி உள்ளார்.

மேலும் இன்று முக ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார்

அதைத் தொடர்ந்து திருக்குவளையில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலையை முக ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைக்கிறார்.

கார்ட்டூன் கேலரி