நினைவு நாள்: இந்து அறநிலையத்துறையை உருவாக்கிய.. முதன்முதலில் மதிய உணவுத்திட்டம் கொண்டுவந்த பனகல் அரசர்!

சென்னை

இன்று (டிசம்பர் 16) பனகல் அரசரின் நினைவு தினமாகும்

.

“சமுதாய ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் ஒடுக்கப்பட்டிருக்கும் பட்டியலின மாணவர்களுக்கு இலவச மதிய உணவு அளித்தால் அவர்கள் கல்வி கற்க பேருதவியாக இருக்கும்” என்று திட்டமிட்டு அறிமுகப்படுத்தியவர் பனகல் அரசர்… இரண்டுமுறை சென்னை மாகாண முதல்வராக இருந்தவர். அதே போல, “பெரும் சொத்துக்களை உடைய இந்து ஆலயங்கள் தனியார்களால் நிர்வகிக்கப்பட்டு பெரும் பணம் கொள்ளை போகிறது. அதைத் தடுக்கவேண்டும்” என்ற நோக்கத்தோடு இந்து அறநிலையத்துறைய உருவாக்கியவரும் இவரே. பனகல் அரசர் என்று அழைக்கப்பட்ட இவரது இயற்பெயர், ராமராய நிங்கார்.

ஆந்திராவின் காளஹஸ்தி அருகே ஜமீன் குடும்பத்தில் 1866-ம் வருடம், ஜூலை 9 அன்று பிறந்தார். . இந்தியாவின் மத்திய நாடாளுமன்றத்தில் 1912 முதல் 1915 வரை உறுப்பினராக பதவி வகித்தார். இதே காலகட்டத்தில் நடேசமுதலியார் துவங்கிய சென்னை திராவிடர் சங்கத்தில் இணைந்தார். பிறகு டாக்டர் டி.எம்.நாயர், பிட்டி. தியாகராயர் செட்டியார் ஆகியோருடன் இணைந்து தென்னிந்திய நல உரிமை சங்கத்தை ( நீதிக் கட்சி) .)1917-ம் ஆண்டு துவங்கினர். அதில் தன்னை இணைத்துக் கொண்டார் பனகல்.

இரட்டை ஆட்சி முறையின் கீழ் சென்னை மாகாணத்துக்கு 1920-ல் முதல் முறையாக தேர்தல் நடந்தது.. முதல்வர் சுப்பராயலு ரெட்டி தலைமையில் ஆட்சி அமைந்தது. அதில் உள்ளாட்சித்துறை மந்திரியாக பனகல் பதவி வகித்தார்.

உடல் நலம் காரணமாக சுப்பராயலு ரெட்டி அடுத்த வருடமே, பதவியை விட்டு விலக, ‘பனகல்’ முதல்வராக பொறுப்பேற்றார். இரண்டாம் முறையாக தேர்தலை சந்தித்து 1923-ல் மீண்டும் முதல்வரானார். இவரது ஆட்சிகாலத்தில் செய்த முக்கிய பணிகள் சில.. வகுப்பு வாரி இட ஒதுக்கீடு கொண்டுவந்தார். கல்லூரியில் பிற்படுத்தப்பட்ட பட்டியலின மாணவர்கள் சேர முடியாத நிலை இருந்ததை மாற்றினார் பட்டியலினத்தவரை சாதிப்பெயரிட்டு அழைக்காமல் ஆதி திராவிடர் என்றே குறிப்பிட வேண்டும் என்று உத்தரவிட்டார் பட்டியலின மாணவர்களுக்கு பள்ளியில் இலவசமாக மதிய உணவு அளித்தார்

சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைக் கழகம் அமைய முக்கிய காரணமாக விளங்கினார் இந்துக் கோயில்களில் வருகிற வருமானங்களை முறைப்படுத்த இந்து அறநிலையத்துறையை உருவாக்கினார் சென்னையை திட்டமிட்டு விரிவுபடுத்தினார் (இப்படித்தான் தியாகராயநகர் உருவானது.  அதை ஒட்டி இந்த பகுதியில் உள்ள புங்கா பனகல்  பூங்கா என அழைக்கப்படுகிறது.   இப்பகுதி அன்று செங்கல்பட்டு மாவட்டம், சைதாப்பேட்டை வட்டத்தில்தான் இருந்தது.) இந்த பெருமைகளுக்குச் சொந்தக்காரரான பனகல் அரசர் டிசம்பர்-16, 1928-ம் ஆண்டில் மறைந்தார்